இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2000-ஆம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற உலக அழகியான பிரியங்கா சோப்ரா பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தனது சிறந்த நடிப்பிற்காக இரண்டு தேசிய விருதுகள் மற்றும் 6 பிலிம்பேர் விருதுகள்  உட்பட பல சர்வதேச விருதுகளும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் டிசம்பரில் ரிலீஸாகும் உலக அளவில் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான தி மேட்ரிக்ஸ் ரிசரக்சன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சோப்ரா , அடுத்ததாக டெக்ஸ்ட் ஃபார் யூ எனும் ஹாலிவுட் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா கடல் பகுதியில் விடுமுறையை கழித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ராவின் புதிய பிகினி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.