கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியானது. 

ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். அதன் பின் பத்திரமாக சொந்த ஊர் திரும்பிய கதை அனைவரும் அறிந்ததே. தற்போது மிக பிரம்மாண்ட திரைப்படத்தை திரையுலகிற்கு அளிக்கவுள்ளார் பிரித்விராஜ். 

இவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஜனகணமன படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என வந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் குணமானார். ரசிகர்களின் கவனத்திற்கு பிரித்விராஜ் பதிவு ஒன்றை செய்துள்ளார். 

அதில், அவருடைய 6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு இருப்பதாகவும் அதை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இது எங்களால் நிர்வகிக்கப்படும் பக்கம் அல்ல. என் 6 வயது மகள் இப்படி ஒரு பக்கத்தை கொண்டிருக்க அவசியமும் இல்லை. வளர்ந்த பிறகு அவள் தீர்மானிக்க முடியும்.

எனவே, இதை உண்மை என்று நம்பி, இந்த போலி கணக்குக்கு இரையாக வேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கு வெட்கக் கேடானது என்றும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி உள்ளார். இதற்கு பலர் அது போலி கணக்கு என்பது தெரியும் என கூறியுள்ளனர்.