கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் பலரும் தங்கள் பொழுதை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

PrakashRaj

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்வுடன் சாப்பிடுகிறோம்.  இந்த லாக்டவுனில் மகிழ்வான தருணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

PrakashRaj Family

பல வருடங்கள் கழித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரகாஷ்ராஜ். கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்திருந்தார்.