பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ராதே ஷியாம்.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.

UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்,மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.இந்த படத்திற்க்கு Dear Comrade,மான்ஸ்டர்,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டது.

கொரோனவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் முதலில் கலந்துகொண்ட படத்தின் நாயகி பூஜா ஹெக்டே அடுத்தாக Beast உள்ளிட்ட சில படங்களின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு தற்போது ராதே ஷியாம் பட ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ளார்,இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே

prabhas radhe shyam pooja hegde joins shoot after vijay beast first schedule