பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக சாஹோ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இதில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷ்ராஃப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

prabhas

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்பு உள்ளது.

prabas

பல கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் குறித்தும், படத்தில் நிறைந்திருக்கும் சுவாரஸ்ய விஷயங்கள் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டாரா பிரபாஸ். பேசியவரிடம், பல ருசிகர கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உடன் நீங்கள் பணிபுரியவுள்ளீர்கள் என்று கேள்விப்பட்டோம். இது உண்மையா ? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இல்லை இச்செய்தி வெறும் வதந்தியே, என் செவிகளிலும் எட்டியது இச்செய்தி என்று தெளிவு படுத்தினர் பிரபாஸ்.