தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அசத்தி வந்தவர் பிரபாஸ்.பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.அடுத்ததாக இவர் நடித்த சாஹோ படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள்ளார்,இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இதனை தொடர்ந்து பிரபாஸ் சில முக்கிய படஙக்ளில் நடித்து வருகிறார்.

இந்தியாவின் முக்கிய சூப்பர்ஸ்டார்கள் மற்றும் முக்கிய இயக்குனர்களுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே,சலார்,ஆதிபுருஷ் என பல பன்மொழிகளில் தயாராகும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் பிரபாஸ்.இதனை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் 25ஆவது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தினை அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.டீ சீரிஸ் மற்றும் பத்திரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படம் 8 மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.ஸ்பிரிட் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.