இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து நீர்ப்பறவை, குள்ளநரிக்கூட்டம், ஜீவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரான இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் விஷ்ணு விஷாலின் திரைப் பயணத்தில் முக்கியமான மைல்கல் திரைப்படங்களாக அமைந்தன. கடைசியாக பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான காடன் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய திரைப்படமான மோகன்தாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஊரடங்கிற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் கலந்து கொண்டார்.இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இயக்குனர் முரளி கார்த்திக் எழுதி இயக்கும் மோகன்தாஸ் திரைப்படத்தை விஷ்ணு விஷாலின் VV ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி.K.S. இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மோகன்தாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்ததாக இயக்குனர் மனோ ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள F.I.R திரைப்படம் திரைக்குவர தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
popular tamil actor vishnu vishal resumes mohandas shoot