பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர். முதல் நாள் கலகலப்பாக நகர, 2-வது நாளில் முதல் டாஸ்க்-ஆக கடந்து வந்த பாதை சுற்று தொடங்கியது. ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸ்களும் அவர்கள் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டனர். 

அதில் இசைவாணி, சின்னபொண்ணு மற்றும் சுருதியின் கடந்து வந்த பாதையை பலருக்கும் நெகழ்ச்சியை கொடுக்க, இமான் அண்ணாச்சி தனக்கே உரித்தான பாணியில் தான் கடந்து வந்த பாதையை நகைச்சுவையோடு பகிர்ந்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.நேற்றும் கடந்து வந்த பாதை சுற்று தொடர்ந்தது.

இதில் நமிதா மாரிமுத்து அவரது வாழ்வில் நடைபெற்ற மிகக் கொடுமையான மனதை உருக்கும் கடந்து வந்த பாதையை கண்ணீரோடு பகிர்ந்து கொள்ள பிக்பாஸ் வீடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கண்களும் கலங்கியது. தொடர்ந்து மதுமிதாவும் அவருடைய கடந்து வந்த பாதையை பகிர நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 8) நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ சற்று முன் வெளியானது. அதில் நடிகை பாவனி தனது கணவரின் மறைவு மற்றும் அதனால் ஏற்பட்ட வலிகளையும் மிக உருக்கமாக பகிர்ந்து கொள்கிறார். எமோஷ்னலானா அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.