விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.

நடிக்கவந்து சில மாதங்கள் ஆனநிலையில் தற்போது முல்லை குறித்து முதல்முறையாக பதிவிட்டுள்ளார் காவியா.முல்லை என்பது சீரியலில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த கதாபாத்திரத்தை எடுத்தபோது சித்ரா அவ்வளவு அழகாக உயிர்கொடுத்த அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈடுசெய்யப்போகிறோம் என்ற அச்சத்துடன் தான் எடுத்தேன்

ஒரு நடிகையாக எனக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது.ஆனால் இப்போது ரசிகர்கள் காட்டும் என்னை இந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)