சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான ஜெர்சி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் நடித்த கேங்லீடர் படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து நானி வி,மற்றும் Tuck ஜெகதீஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது 25ஆவது படமான வி படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்

இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டிருந்தது.ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது என்றும்,இந்த படம் செப்டம்பர் முதல் வாரத்தில் அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.நானியின் 25ஆவது படம் என்பதால் இதனை திரையரங்கில் பார்க்கவேண்டும் என்று ரசிகர்கள் சிலரும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

நானி நடித்துள்ள வி படம் அமேசான் ப்ரைம்மில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது.ரசிகர்கள் சிலர் இந்த படத்தை திரையரங்குகளில் காணமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.நானி தனது அடுத்த படமான டக் ஜெகதீஷ் படம் நிச்சயம் திரையரங்கில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இருந்தாலும் நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் ,இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.தற்போது இந்த படத்தின் பார்ட்டி பாடலுக்காக நடனத்தில் தயாரான விதம் குறித்து நிவேதா தாமஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Practice for progress. Thank you @vijay_binni master ✌️ #vonprime @mohanakrishnaindraganti 🤗

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on