தமிழ்த் திரையுலகில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்குப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வரவே, இப்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் போலி ட்விட்டர் கணக்கு உருவானது குறித்து பேசியிருந்தார் நிவேதா பெத்துராஜ். இந்த விஷயம் பெரிதளவில் வைரலானது. அதனைத் தொடர்ந்து இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். 

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பெத்துராஜ் நடிகைளில் ஒருவர் ஆவார். ஏனென்றால் சமூக வலைத்தளங்களின் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் ரசிகர்களுடன் அப்பப்ப சாட் செய்வதும் வழக்கமான ஒன்றாக வைத்து உள்ளார்.

தற்போது What the Uff என்ற பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். திங்க் ஒரிஜினல்ஸ் இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இந்த பாடலை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஹரிகா நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார். இந்த பாடல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நிவேதா பெத்துராஜ் கைவசம் விரட்ட பருவம், பார்ட்டி திரைப்படங்கள் உள்ளது. இதில் பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.