தென்னிந்தியா திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நிசப்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இரண்டு படத்திற்கு பிறகு நிசப்தம் படத்தில் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார்.

shalinipandey madhavan

இவர்களோடு அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது.

anjali madhavan

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி சீரான வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம்.