மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி அசத்திவரும் படம் கைதி. இப்படம் முழுவதுமே இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.

kaithi

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இதனை எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இதில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியன், ரமணா, தீனா, தலைவாசல் விஜய், பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 80 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

samcs

இப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் விரைவில் வெளியாகும் என்ற தகவலை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பதிவு செய்துள்ளார்.