இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாக்ஷனின் க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்த நவரசா வெப்சீரிஸின் நவரசங்களை குறிக்கும் ஒன்பது எபிசோடுகளின் டைட்டில்களும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்த அறிவிப்போடு புதிய புகைப்படங்களும் வெளியானது.

சிருங்காரம், வீரம் ,கருணை, வியப்பு, சிரிப்பு, பயம், அருவருப்பு, ரௌத்திரம், சாந்தம் ஆகிய ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒன்பது தனித்தனி கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த நவரசா.

1.வெட்கம் அல்லது காதலை சொல்லும் உணர்வான சிருங்காரம் உணர்வை உணர்த்தும் கிட்டார் கம்பி மேலே நின்று கதையை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். நடிகர் சூர்யா நடிகை பிரயாகா மார்டின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார்.

2. கோப உணர்வை பேசும் ரௌத்திரம்  கதையின் மூலம் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் அரவிந்த் சுவாமி.  ரித்விகா, ரமேஷ் திலக், பசங்க ஸ்ரீராம் நடிக்கும் இக்கதைக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

3. சிரிப்பை வரவழைத்து நகைச்சுவை உணர்வை கொடுக்கும் சம்மர் ஆஃப் 92 (SUMMER OF 92) கதையை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர்.


 4. வியப்பை உணர்த்தும் அற்புத உணர்வை காட்டும் ப்ராஜெக்ட் அக்னி (PROJECT AGNI) கதையில் அரவிந்த் சுவாமி ,பிரசன்னா, பூர்ணா உள்ளிட்டோர் நடிக்க இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

5. அருவருப்பு அல்லது இழிவு உணர்வை கொட்டும் பாயாசம் கதையில் அதிதி பாலன், ரோஹினி, டெல்லிகணேஷ் நடிக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியுள்ளார்

6. அமைதியை குறித்து சாந்த உணர்வை தரும் பீஸ் (PEACE) கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

7. கருணையை பொழியும் எதிரி கதையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி அசோக் செல்வன் நடிக்க, பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார்.

8. வீரத்தை உணர்த்தும் துணிந்த பின் கதையை இயக்குனர் சர்ஜுன்K.M.  இயக்கியுள்ளார். நடிகர்கள் அதர்வா ,அஞ்சலி ,கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

9. பயத்தை உணரும் இன்மை கதையில் நடிகர் சித்தார்த், நடிகை பார்வதி நடிக்க, இயக்குனர் ரதீன்தரன்.R.பிரசாத் இயக்கியுள்ளார்.

நவரசங்களையும் ஒன்றிணைத்து உருவாகியுள்ள இந்த நவரசா வெப் சீரிஸில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் மாதம் நவரசா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .தொடர்ந்து நவரசா-வின்  டீசர் மற்றும் டிரைலர்கள் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

நெட்பிளிக்ஸில் வெளியாகும் நவரசா வெப் சீரிஸிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயை கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட FEFSI திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்கும் 12000-கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்கள் இதோ….

navarasa netflix anthology web series full cast details here navarasa netflix anthology web series full cast details here navarasa netflix anthology web series full cast details here navarasa netflix anthology web series full cast details here navarasa netflix anthology web series full cast details here