வாகை சூடவா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். வத்திக்குச்சி, நய்யாண்டி, உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2, ராட்சசன் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். மெலடியில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கடைசியாக வைபவ் நடித்த சிக்ஸர் படத்திற்கு இசையமைத்தார் ஜிப்ரான். 

Music Director Ghibran Deletes His TikTok And Helo Accounts

இந்நிலையில் ஜிப்ரான் தனது டிக்டாக் மற்றும் ஹலோ அக்கௌன்ட்டுகளை அடியோடு அழித்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் சீன ஆப்களை நீக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். சீன தயாரிப்புகள் எதையும் இனி உபயோகப்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். இப்படியிருக்கும் சூழலில் ஜிப்ரான் செய்த இக்காரியம் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

Music Director Ghibran Deletes His TikTok And Helo Accounts

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான க.பெ. ரணசிங்கம் படத்தின் இசைபணிகளை முடித்த ஜிப்ரான், அடுத்ததாக மாதவன் நடிக்கும் மாறா படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.