சுதந்திர தினத்தில் மாஸ்டர் பாடல் வெளியாகிறதா ? படக்குழுவினர் பளிச்
By Sakthi Priyan | Galatta | August 11, 2020 09:50 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது.
ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தார். கொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும், அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் ரீரெகார்டிங் பணியில் ஈடுபட்ட அனிருத், ஒட்டுமொத்த படத்தையும் பார்த்துள்ளார். செமயா வந்திருக்கு படம் என்று கூறியும் இருந்தார். நாளுக்கு நாள் படம் குறித்த ஆவல் அதிகமாகி கொண்டே போகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். லாக்டவுனில் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வருவதை காண முடிகிறது. சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் கிராண்ட் ரிலீஸ் செய்யப்படும் என்ற சுவையூட்டும் செய்தியை பதிவு செய்தனர். .
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் Quit பண்ணுடா பாடலின் வீடியோ வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர நாளில் வரும் என இணையத்தில் செய்திகள் பரவியது. அதுமட்டுமல்லாமல் பாடலின் சென்சார் தகவலும் அதில் இருந்தது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரிக்கையில் சென்சார் ஆனது உண்மை தான், ஆனால் பாடல் வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று விளக்கியுள்ளனர்.
Suriya's breaking statement on this latest incident! Check Out
11/08/2020 11:34 AM
Quit Pannuda Lyric video | Thalapathy Vijay | Anirudh
11/08/2020 10:37 AM
Kamal Haasan gets emotional - thanks these two young directors!
11/08/2020 10:33 AM
Mass: This blockbuster Mahesh Babu film to be remade! Exciting details inside!
10/08/2020 07:03 PM