தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master FDFS Will Be Like It Rohini Silver Screens

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master FDFS Will Be Like It Rohini Silver Screens

இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் இந்த ரிலீஸ் தள்ளிப்போனது.நேற்று நமது நாட்டில் உள்ளவர்களின் ஒற்றுமையை காட்ட அனைவரையும் இரவு 9 மணிக்கு பிரதமர் விளக்கேற்றச்சொன்னார்.

Master FDFS Will Be Like It Rohini Silver Screens

இதற்கு பலரும் தங்கள் ஆதரவை அளித்தனர்.சிலர் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.இதனை பார்த்த சென்னையின் பிரபல திரையரங்கமான ரோஹிணி திரையரங்கத்தினர் விஜயின் மாஸ்டர் வெளியாகியிருந்தால் இப்படி தான் இருக்கும் என்று தங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.