கடந்த 1995-ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். தொடர்ந்து பல வெற்றித்திரைப்படங்களில் நடித்தவர், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழில் அறிமுகமானார். நடிப்பை தாண்டி நடனம், பாடல் என பன்முகத்திறமை கொண்டவர் மஞ்சு வாரியர். இவரது நடிப்பில் சதுர் முகம், தி ப்ரீஸ்ட், லலிதம் சுந்தரம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. 

Manjuwarrier

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

Manjuwarrier

 இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். அப்பதிவில், டான்ஸர்கள் பறக்க இறக்கைகள் தேவையில்லை என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dancers don't need wings to fly! 📸 @madhuwariar #worlddanceday

A post shared by Manju Warrier (@manju.warrier) on