இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய நாயகன், தளபதி, அஞ்சலி போன்ற படங்கள் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. கடைசியாக செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்கினார். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோரை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். 

Manirathnam

ஊரடங்கு நேரத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் திரைப்பிரபலங்கள் ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றி உரையாடி வருகின்றனர். சுஹாசினி மணிரத்னத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நேரலையில் இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Manirathnam Live

அப்போது நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்று ரசிகர் கேட்க, அதற்கு பதிலளித்தார் மணிரத்னம். ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷிடம் இருந்து  நடிப்பதற்கான வேண்டுகோள்விடுக்கப்பட்டதாகவும்..ஆனால் அதனை நிராகரித்ததாகவும் தெரிவித்தார். படத்தில் நடித்துவிட்டு இயக்க சென்றால், நடிகர்கள் என்னிடம், நீங்கள் எப்படி நடிக்கிறீர்கள்னு தான் நாங்க பார்த்தோமே என்பார்கள். ஆனால் நான் நடிக்காததால், எனக்கு அனைத்தும் தெரிந்த மாதிரி பிற நடிகர்களிடம் இருந்து அற்புதமான நடிப்பை வெளிக்கொண்டுவர முடியும் என்றார்.