டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Lawrence To Donate 25 Lakhs Sanitization Workers

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2,மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Lawrence To Donate 25 Lakhs Sanitization Workers

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையினர்,முதல்வர் நிவாரண நிதி,பிரதமர் நிவாரண நிதி என்று ஏற்கனவே லாரன்ஸ் ரூ.3 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கியிருந்தார்.தற்போது கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் திரு ராகவா லாரன்ஸ் தனது சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்குமாறு கேட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Lawrence To Donate 25 Lakhs Sanitization Workers