நவரசத்தின் ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒன்பது எபிசோடுகள் அடங்கிய ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளான சூர்யா,விஜய் சேதுபதி,சித்தார்த்,அரவிந்த் சுவாமி, பிரசன்னா, அதர்வா,கிஷோர், பிரகாஷ்ராஜ்,ரேவதி,பாபி சிம்ஹா,அஞ்சலி,பார்வதி, யோகிபாபு, அதிதி பாலன், டெல்லிகணேஷ், கௌதம் வாசுதேவ் மேனன், பூர்ணா, ரித்விகா, ரோகினி,பிரயாகா மார்டின், ரம்யா நம்பீசன்,நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நவரசாவில் நடித்துள்ளனர்.

கிட்டார் கம்பி மேலே நின்று,சம்மர் ஆஃப் 92,பீஸ்,ப்ராஜட் அக்னி , இன்மை, பாயாசம்,ரௌத்திரம் ,எதிரி, துணிந்தபின் என 9 எபிசோடுகள்  இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன்,ப்ரியதர்ஷன்,கார்த்திக் சுப்புராஜ்,கார்த்திக் நரேன், ரதீந்திரன் R பிரசாத்,வசந்த் சாய்,அரவிந்த் சுவாமி,பிஜோய் நம்பியார்,சர்ஜூன் என ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியானது.

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாக்ஷனின் க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியானது.இதில் கிடைத்த மொத்த வருவாயும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நலிவடைந்த திரைத்துறையை சேர்ந்த 12 ஆயிரம் திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் நிவாரணமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நவரச மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. ஒன்பது எபிசோடுகளை இயற்றிய இயக்குனர்களும் அதில் பணிபுரிந்த நடிகர் நடிகைகளும் படப்பிடிப்பின் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இந்த மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.