தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்ப்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாகும். முதலில் வெளிநாடுகளில் துவங்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதலில் ஹிந்தியில் வெளியானது.அதைத் தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக தென்னிந்தியாவிலும் அறிமுகமான இந்த நிகழ்ச்சி தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியான இந்த நிகழ்ச்சியில் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மலையாளத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வருடம் தொடங்கப்பட்ட  மலையாள பிக் பாஸ் SEASON 3 நிகழ்ச்சி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இறுதிச்சுற்று நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பாக  தடைபட்டது. சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த மலையாள பிக் பாஸ் படப்பிடிப்பு சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பெயரில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று பற்றிய தகவல் இன்று வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ இன்று வெளியானது. அந்த  ப்ரோமோவில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் மோகன்லால் இறுதிச்சுற்று விரைவில் நடைபெறும் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார். 

பேரிடர் காரணமாக நிகழ்ச்சி தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதால்  இறுதிச்சுற்று தள்ளிப்போகிறது என்று தெரிவித்துள்ள மோகன்லால் இறுதிச்சுற்றுக்கு அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் மோகன்லால் பேசிய இந்த ப்ரோமோ தற்போது மலையாள பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.