மீண்டும் வருகிறது லொள்ளு சபா ! மகிழ்ச்சியில் நகைச்சுவை விரும்பிகள்
By Sakthi Priyan | Galatta | April 04, 2020 09:49 AM IST

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்து வருகிறது. மெட்டி ஒலி, ராமாயணம், சரவணன் மீனாட்சி, சக்தி மான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து லொள்ளு சபா நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என ரசிகர்களிடையே கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது லொள்ளு சபா நிகழ்ச்சி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். இந்த வசனம் விஜய்சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்றதாகும்.
Kumudha happy annachi 🙏🙏😂 https://t.co/O2rLmfIEiS
— lets stay indoors India 🇮🇳 (@ashwinravi99) April 3, 2020