இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் லெஜண்ட் சரவணனின் முதல் படமாக தி லெஜண்ட் திரைப்படம் நேற்று ஜூலை 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து தி லெஜண்ட் படத்தை இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தி லெஜண்ட் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக பல முன்னணி திரையரங்குகளில் தி லெஜண்ட் திரைப்படம் 4:00 & 5.00மணி காட்சிகளும் திரையிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களின் இந்த ஏகோபித்த வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்த சரவணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திரையரங்கில் ரசிகர்கள் தி லெஜண்ட் திரைப்படத்தை கொண்டாடும் வீடியோவை பகிர்ந்து "தி லெஜண்ட் திரைப்படத்திற்காக நீங்கள் அளிக்கும் இந்த வரவேற்பிற்கு நன்றி.. உங்களுடைய அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் கடமைப்பட்டுள்ளேன்" என தெரிவித்து பதிவிட்டுள்ளார். லெஜண்ட் சரவணனின் அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Legend Saravanan (@yoursthelegend)