டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Lawrence 50 Lakhs For Free Food in Amma Unavagam

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2,மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Lawrence 50 Lakhs For Free Food in Amma Unavagam

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையினர்,முதல்வர் நிவாரண நிதி,பிரதமர் நிவாரண நிதி என்று ஏற்கனவே லாரன்ஸ் ரூ.3 கோடி ரூபாய் இது தவிர தூய்மை பணியாளர்களுக்கு 25 லட்சம்,நடிகர் சங்கத்திற்கு 25 லட்சம் என்று உதவித்தொகை வழங்கியிருந்தார்.

Lawrence 50 Lakhs For Free Food in Amma Unavagam

தற்போது லாரன்ஸ் முதல்வர் நிவாரண நிதிக்கு  அளித்த 50 லட்ச ரூபாயில் கோடம்பாக்கம்,வடபழனி,வளசரவாக்கம்,கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவளிக்க பயன்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.