சின்னத்திரையில் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 

முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சிலம்பரசன் TR பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களிலிருந்து  சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி & நிரூப்  நந்தகுமார், அபிநய், தாமரைச்செல்வி, சுருதி  ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ்களாக நுழைந்துள்ளனர்.

மேலும் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க விஜய் டிவி பிரபலமும் நடிகருமான KPY சதீஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார்.  கடந்த வாரம் தனது உடல்நிலை காரணமாக திடீரென சுரேஷ் சக்கரவர்த்தி மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறினார். 

தொடர்ந்து கடந்த வாரத்தில் விஜய் டிவியின் முக்கிய நகைச்சுவை பிரபலமும் நடிகருமான தீனா மற்றும் பிரபல நடன இயக்குனரும் பிக் பாஸ் சீசன் 3 ரன்னர் அப்-ஆக வெற்றி பெற்றவருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் அல்டிமேட்டில் என்ட்ரி கொடுத்தனர். இந்நிலையில் KPY சதீஷ் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. இன்று (மார்ச் 27) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் KPY சதீஷ் Evict-ஆகி வெளியே செல்வது ஒளிபரப்பாகும்.