கன்னட  திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் யாஷ்  கன்னடத்தில் வெளியான மொகின மனசு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து யாஷ் நடித்த ராக்கி, லக்கி, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் விஜய் கிரகுன்டூர் தயாரிப்பில் வெளிவந்த கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப் பிரபலம் அடைந்தார். கேஜிஎப்  திரைப்படத்தில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பில் அசத்த, ராக்கி பாய் கதாபாத்திரமும் கேஜிஎப் திரைப்படமும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு கன்னட திரைப்படம் என்ற பெருமையை பெற்ற திரைப்படமாக கேஜிஎப் திகழ்கிறது. 

இந்நிலையில் கேஜிஎப் கதாநாயகன் யாஷ் மகனின் அழகிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.யாஷின் மனைவி ராதிகா பண்டிட்  தன் செல்ல மகன் யாதர்வ்க்கு நகம் வெட்டும் அந்த வீடியோவில் யாதர்வ்  தனது சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்கும் அந்த அழகான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.