2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முக்கிய வில்லனான ஆதிரா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது என்று இந்த சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவரும்,பிரபல பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியானதால் சிலர் அதனை அவருக்கு கொரோனா தொற்று என்று செய்தி பரப்பினர்.இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் என்றும் தனது கொரோனா இல்லை வேறு சில காரணங்களால் மருத்துவமனையில் உள்ளேன் என்றும் பதிவிட்டுள்ளார்.மேலும் மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.