தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

Keerthy Suresh Agrees To Reduce Her Salary Due To Corona Pandemic

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை குறைத்து விட்டார் என்று ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் தெரியவந்தது. தனது சம்பளத்தை அவர் 20 முதல் 30 சதவீதம் அளவிற்கு குறைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக ஒப்பந்தமாகும் படங்கள் அனைத்திற்கும் சம்பளத்தைக் குறைத்துத் தான் பேசியுள்ளராம். 

Keerthy Suresh Agrees To Reduce Her Salary Due To Corona Pandemic

கொரோனா முழு அடைப்பு காரணமாக இந்தியா முழுவதும் சினிமாத் துறை முழுவதும் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் திறக்கவும் சில காலம் ஆகும் என்ற நிலை தான் உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவை நம்பி இருக்கும் குடும்பங்களை மனதில் கொண்டு திரைப்பிரபலங்கள் தங்களது சம்பளத்தை குறைத்தே ஆக வேண்டும். லாக்டவுன் முடிந்தவுடன் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடிக்கவுள்ளார் கீர்த்தி.