பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.இவரை தவிர பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ரசிகர்களும் விமர்சகர்களும் இந்த படத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இந்த படத்தின் ஹே ப்ரோ பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்