தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து கலகலப்பான என்டர்டெய்னிங் படங்களை வழங்கி வரும் இயக்குனர் டீகே கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த யாமிருக்க பயமே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து இவர் இயக்கத்தில் வெளிவந்த கவலைவேண்டாம் திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக காஜல் அகர்வால், ரெஜினா கெஸன்ட்ரா, ஜனனி ஐயர் உள்ளிட்ட கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் கருங்காப்பியம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் டீகே இயக்கத்தில் ஹாரர் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் காட்டேரி.

வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார்,சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் காட்டேரி திரைப்படத்தில் பொன்னம்பலம், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளுசபா மனோகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். P.S.வினோத் ஒளிப்பதிவில் காட்டேரி படத்திற்கு S.N.பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் காட்டேரி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் காட்டேரி திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#Katteri Tamilnadu Release by @SakthiFilmFctry @sakthivelan_b#KatteriFeastFromAug5@StudioGreen2 @kegvraja @abiabipictures @abineshelango @actor_vaibhav #Deekay @bajwasonam @varusarath5 @im_aathmika @NehaGnanavel @Dhananjayang @thinkmusicindia @digitallynow @proyuvraaj pic.twitter.com/uQK5GKGk6o

— Studio Green (@StudioGreen2) July 27, 2022