கடந்த சில தினங்களில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இயக்குனர் ராஜமௌலி, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கருணாஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான  கருணாஸ் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து அவர்  வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அவரது மகனும் நடிகருமான கென் கருணாஸ் சமீபத்தில் கருணாஸின் உடல் நிலை குறித்து பதிவு செய்திருந்தார். 

அப்போது, என்னுடைய அப்பா வுக்கு குரோனா பாசிட்டிவ் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் அரசியல்வாதி மற்றும் சமூக சேவைகள் செய்து வருகிறார். அவர் தன்னுடைய தொகுதிக்கும் மற்ற இடங்களுக்கும் கடந்த சில தினங்களில் சென்று வந்திருக்கிறார். அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உடல் நலம் குறித்து நடிகர் கருணாஸ் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் என அவர்களுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

கருணாஸ் பேசுகையில், நான் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது சென்னை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறேன்.  தனக்கு மருத்துவர்கள் அளிக்கும் கவனிப்பு மற்றும் சிகிச்சையால் நான் மெதுவாக & பாதுகாப்பாக மீண்டு வருகிறேன். முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

பாப் இசை பாடல்கள் பாடுவதில் வல்லவரான கருணாஸ், பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் மூலம் புகழ் பெற்ற அவர் பிதாமகன், வசூல் ராஜா, பாபா, பொல்லாதவன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பின் விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி சில மாவட்டங்களில் வெளியிட்டு இருக்கிறார் கருணாஸ். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி என்ற படத்தை எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

நடிகர் சூர்யாவோடு சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார் கருணாஸ். 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Greetings to all .... This is S. Karunaas MLA here, I was tested corona positive on 06/08/2020 and is now treated at The Government Hospital Chennai. I am slowly and safely recovering by the care and treatment given by our LIFE SAVING WARRIORS called as DOCTORS. As a representative of my people I have chose government hospital as they provide everyone with their utmost care with good ,caring doctors , with good medications, healthy food . Special mention to the sanitary workers/ support staff for maintaining cleanliness which is very much needed during this pandemic situation . My heartfelt thanks to Our Honorable Chief Minister Sir ,our Honorable Health Minister Sir , My constituency people ,to all my lMukkulathor Pulipadai members and to all the people of Tamilnadu and people from other countries who have prayed and wished me speedy recovery with their love and kind words . Thank you all once again . My humble request kindly stay home and leave your houses only when it’s emergency .

A post shared by Karunaas (@sethukarunaas) on