தமிழ் சினிமாவின் மீது தீரா காதல் கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா.படத்திற்கு படம் ஒரு வித்தியாசம் என்று ரசிகர்களுக்காக ஏதேனும் ஒரு விஷயத்தை புதுமையாக செய்யவேண்டும் என்று போராடும் குணமுடையவர் சூர்யா.1997-ல் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா.இந்த படத்தில் இவருக்கு பல விமர்சனங்கள் எழுந்தன ஆனால் அதனை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவதரித்துள்ளார் சூர்யா.

நேருக்கு நேர் படத்தை தொடர்ந்து ரொமான்டிக் ஹீரோவாக அவதரித்து வந்த சூர்யாவிற்கு பாலாவின் நந்தா படம் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்து.இந்த படத்திற்கு பிறகு சூர்யா ஆக்ஷன் ஹீரோவாக அவதரிக்க தொடங்கினார்.தொடர்ந்து பேரழகன் போன்ற வித்தியாசமான படங்களில் நடிப்பதையும் சூர்யா தவிர்க்கவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த கஜினி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று இவரை வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.இதனை தொடர்ந்து கெளதம் மேனனுடன் இவர் நடித்த காக்க காக்க திரைப்படம் இவரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியது.இதனை தொடர்ந்து சில்லுன்னு ஒரு காதல்,வேல் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார் சூர்யா.வாரணம் ஆயிரம் படம் இவருக்கு மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்து விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக இது மாறியது.

இதனை தொடர்ந்து 2009-ல் வெளியான அயன் படம் இவரை வசூல் நாயகனாக உயர்த்தியது,தொடர்ந்து இவர் நடித்த சிங்கம் திரைப்படம் இவரை முன்னணி நடிகராக அமர்த்தியது.இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சிங்கம் 2,சிங்கம் 3,தானா சேர்ந்த கூட்டம்,மாஸ் என்று சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார் சூர்யா.அடுத்ததாக இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.படத்தில் நடிப்பதை தவிர அகரம் மூலம் பல மாணவர்களை சூர்யா படிக்கவைத்து வருகிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.சூர்யா மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் 24,விக்ரம் குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.சைன்ஸ் பிக்ஷன் படமான இது பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் கடந்த மாதம் அமேசான் ப்ரைம்மில் வெளியானது.தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம்மில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.படத்தின் ஆடியோ சரியாக இல்லாததால் படம் நீக்கப்பட்டுள்ளது என்றும் எப்போது வேண்டுமானாலும் இந்த படம் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.