தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். நேற்று திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் விரும்பும் படைப்பாக குறிப்பாக இளைஞர்கள் விரும்பும் வகையில் இருந்தது. இப்படம் துல்கர் சல்மானின் 25-வது படமாகும். 

dulquer dulquer

இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மசாலா கஃபே இசையமைத்திருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் முக்கிய ரோலில் அசத்தியிருக்கிறார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனனின் மாறுபட்ட நடிப்பு படத்தில் இடம்பெற்றுள்ளதாம். 

kannumkannumkollaiyadithaal gauthammenon

இரண்டு பாடல்களை தொடர்ந்து தற்போது படத்தின் டயலாக் ப்ரோமோ காட்சி வெளியானது. துல்கர் கைவசம் வான் திரைப்படம் உருவாகி வருகிறது.