“ஹீரோவிற்கு நிகராக சம்பளம் வாங்குவது நான் மட்டும் தான்..” பெருமையுடன் கங்கனா ரனாவத் பதிவு – ரசிகர்களால் வைராலாகும் பதிவு இதோ..

அதிகம் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகை என்பது குறித்து கங்கனா ரனாவத் பகிர்ந்த தகவல் - Kangana ranaut about highest Bollywood actress | Galatta

திரைத்துறையில் மிக பிரபலமாகவும் என்றும் டிரெண்ட்டிங்கில் இருக்கும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். தமிழ், தெலுங்கு. இந்தி என பல மொழி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கங்கனா ரனாவத். பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் கதையாசிரியராகவும் தற்போது கங்கனா ரனாவத் தனித்து நிற்கிறார். தற்போது கங்கனா ரனாவத் தமிழில், பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தியில் எமர்ஜென்சி திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குரிப்பிடதக்கது.

கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவருடைய தனிப்பட்ட கருத்துகளையும் பிரச்சனை குறித்த குரலையும் பதிவிட்டு வருகிறார். அந்த பதிவு பெரும்பாலும் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாவது வழக்கம். அதன்படி தற்போது தனியார் ஊடகத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா "இதுவரை நான் 60 படங்களில் நடித்து முடித்துள்ளேன். இதில் ஒரு படத்தில் கூட ஹீரோக்கு இணையான சம்பளத்தை பெற்றதில்லை.. ஆண் நடிகர்கள் திரைத்துறையில் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதம் அளவு நடிகைகள் பெற்று வருகின்றனர். இந்த நிலை இப்போதும் திரைத்துறையில் நிகழ்ந்தேறி வருகிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன் “இது முற்றிலும் உண்மை.. எனக்கு முன்னாள் இருந்த நடிகைகள் இந்த ஆணாதிக்க விதிகளின் படி குறைவான சம்பளம் வாங்கி வந்தனர். முதல் முறையாக அதை எதிர்த்து சண்டையிட்டது நான்தான்.. அந்த நேரத்தில் நான் எதிர்கொண்ட அருவருப்பான விஷயம் என்னவென்றால் என்னுடைய சக நடிகைகள் நான் பேரம்பேசிய கதாபாத்திரங்களை இலவசமாக நடித்து கொடுத்தனர்.

பெரும்பாலான முன்னணி நடிகைகள் மற்ற சில விஷயங்களுக்காக இலவசமாக நடிக்கின்றனர் என்பதை நான் உறுதியாக தெரிக்கிறேன். கதாபாத்திரம் வேறு ஒருவருக்கு சென்றுவிட கூடாது என்ற அச்சமே இதற்கு காரணம். பின் சிலர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்று கட்டுரைகள் வெளியிடுகின்றனர். திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகை நான் மட்டும் தான் என்பது அனைவருக்கும் தெரியும் “  என்று குறிப்பிட்டு கருத்தை பகிர்ந்துள்ளார்.

actor siddharth speech about his upcoming takkar movie at chennai press meet

இதையடுத்து கங்கனா ரனாவத் அவர்களின் பதிவு மிகபெரிய அளவில் வைரலாகி வருகிறது.

பாரதிராஜா நடித்து வரும் ‘மார்கழி திங்கள்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - உயிர் தப்பிய படக்குழு.. பின்னணி இதோ..
சினிமா

பாரதிராஜா நடித்து வரும் ‘மார்கழி திங்கள்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - உயிர் தப்பிய படக்குழு.. பின்னணி இதோ..

சமந்தாவின் சாகுந்தலம் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள் – விமர்சனத்துடன் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

சமந்தாவின் சாகுந்தலம் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள் – விமர்சனத்துடன் வைரலாகும் பதிவு இதோ..

‘போர் தொழில்’ பழகும் அசோக் செல்வன்.. வாத்தியாராக சரத்குமார்..–  எதிர்பார்பை எகிற வைக்கும் மிரட்டலான டிரைலர் இதோ..
சினிமா

‘போர் தொழில்’ பழகும் அசோக் செல்வன்.. வாத்தியாராக சரத்குமார்..– எதிர்பார்பை எகிற வைக்கும் மிரட்டலான டிரைலர் இதோ..