நெஞ்சமே.. கொஞ்சியே.. மாமன்னன் படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ் – ரசிகர்களால் வைரலாகும் அறிவிப்பு இதோ.

மாமன்னன் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாரி செல்வராஜ் -  Maamannan 3rd single song release date announced | Galatta

ரசிகர்களின் மத்தியில் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வாராஜின் முந்தைய திரைப்படமான பரியேரும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன்படியே நாளுக்கு நாள் மாமன்னன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு உயர்ந்து வருகிறது.

ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் உலகநாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பாதாகவும் தகவல் ஆனால் சிறப்பு விருந்தினர் குறித்த அதிகாரபூர்ப அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் ஏ ஆர் ரஹ்மான் நேரலையில் இசையமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள மூன்றாவது பாடல் வெளியீட்டு குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி படத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் இருவருக்குமிடையேயான காதல் பாடலாக உருவாகியிருக்கும் பாடலின் அறிவிப்பை சிறப்பு போஸ்டருடன் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அதனுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் “நெஞ்சமே நெஞ்சமே.. கொஞ்சியே சொல்லுதே... ஆரிரோ.” என்று பாடல் வரிகளை குறிப்பிட்டு மேலும் அதனுடன் “மாமன்னன் இசை மழை நாளை முதல்” என்று முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

It's time!
Yes, we're almost there!
We will come to you with a soulful musical evening!
An @arrahman 's magic on the way! 🎶🎶🎶🎶🎤🎤🎶🎶🎶🎶🎶🎶#MAAMANNANliveconcert #Maamannan🫅@Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasilpic.twitter.com/nuAe2wQYCz

— Mari Selvaraj (@mari_selvaraj) May 31, 2023

இந்த அறிவிப்பு தொடர்பாக வெளியான போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. முன்னதாக யுகபாரதி வரிகளில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மாமன்னன் படத்தில் இடம் பெற்ற வைகை புயல் வடிவேலு குரலில் உருவான ‘ராசாகண்ணு’ பாடல் ரசிகர்களை அதிகளவு கவர்ந்து டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் குரலில் ‘ஜிகு ஜிகு ரயில்’ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

‘போர் தொழில்’ பழகும் அசோக் செல்வன்.. வாத்தியாராக சரத்குமார்..–  எதிர்பார்பை எகிற வைக்கும் மிரட்டலான டிரைலர் இதோ..
சினிமா

‘போர் தொழில்’ பழகும் அசோக் செல்வன்.. வாத்தியாராக சரத்குமார்..– எதிர்பார்பை எகிற வைக்கும் மிரட்டலான டிரைலர் இதோ..

ஹெல்மெட் போட்டும் ஏற்பட்ட விபத்து.. விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த சோகம் – பின்னணி இதோ..
சினிமா

ஹெல்மெட் போட்டும் ஏற்பட்ட விபத்து.. விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த சோகம் – பின்னணி இதோ..

“வெங்கடேஷ் பட் சாரோட 80 ஆயிரம் ரூபாய் ஷூ போச்சு..” CWC செட்டில் நடந்த சம்பவம் குறித்து குரேஷி...  – சுவாரஸ்யமான வீடியோ உள்ளே
சினிமா

“வெங்கடேஷ் பட் சாரோட 80 ஆயிரம் ரூபாய் ஷூ போச்சு..” CWC செட்டில் நடந்த சம்பவம் குறித்து குரேஷி... – சுவாரஸ்யமான வீடியோ உள்ளே