மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் வெற்றிநடை போட்ட தொடர் நாதஸ்வரம்.இந்த தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சங்கவி.இதனை அடுத்து மீண்டும் திருமுருகன் இயக்கிய குலதெய்வம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சங்கவி.

இதனை அடுத்து ஜீ தமிழின் ஆத்மா தொடரில் நடித்தார்,அடுத்தாக திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடரான கல்யாண வீடு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் சங்கவி.

ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ரெட்டை ரோஜா.இந்த தொடரில் சாந்தினி தமிழரசன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.அக்ஷய் கமல் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.

400 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் சமீபத்தில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார் சங்கவி.இவருக்கு சில தினங்களுக்கு முன் தீருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.