தமிழில் நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க நடிகை ரூபா மஞ்சரி ஓவியா கதாநாயகிகளாக நடித்து வெளிவந்த திரைப்படம் யாமிருக்க பயமே. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவான நகைச்சுவை திகில் திரைப்படமான யாமிருக்க பயமே திரைப்படத்தை இயக்குனர் டீகே இயக்கியிருந்தார்.

யாமிருக்க பயமே வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜீவா உடன் இணைந்த இயக்குனர் டிகே கவலை வேண்டாம் திரைப்படமும் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கடைசியாக நடிகர் வைபவ் ,வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா,சோனம் பாஜ்வா இணைந்து நடித்த காட்டேரி திரைப்படத்தை இயக்கி இருந்தார். 

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் டீகே இயக்கும் புதிய திரைப்படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கெஸன்ட்ரா, ஜனனி ஐயர் மற்றும் அதிதி ரவீந்திரநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கருங்காப்பியம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. 

நடிகர் கலையரசன் மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏபி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் கருங்காப்பியம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் S.N.பிரசாத் இசையமைத்திருக்கிறார். 4 முன்னணி கதாநாயகிகள் மிரட்டலான லுக்கில் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.