ஜெயம் ரவி - நயன்தாராவின் அதிரடி த்ரில்லர் ட்ரீட்டாக வரும் இறைவன்… கவனம் ஈர்க்கும் Shades Of Love பாடல் இதோ!

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட Shades Of Love பாடல் வெளியீடு,jayam ravi in iraivan movie Shades Of Love out now nayanthara | Galatta

வித்தியாசமான சீரியல் கில்லர் கான்செப்டில் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இறைவன் திரைப்படத்திலிருந்து Shades Of Love எனும் பாடல் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜெயம் ரவி தற்சமயம் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் . சமீபத்தில் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வரிசையாக வெளிவந்து மக்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் சைரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கலக்கல் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் Brother படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இதனிடையே ஜெயம் ரவி நடிப்பில் அடுத்த அதிரடி படமாக ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் படம் தான் இறைவன். வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திஇறைவன் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். விஸ்வரூபம் பட வில்லன் நடிகர் ராகுல் போஸ் மிரட்டலான வில்லனாக நடிக்க, ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன்,  சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள், பக்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, இறைவன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் இறைவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த இறைவன் படத்தின் ட்ரெய்லர் பக்கா சைக்கோ சீரியல் கில்லர் படமாக ரசிகர்களுக்கு புது ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக புதிய பாடல் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். Shades Of Love என்ற பாடல் தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த Shades Of Love பாடலின் லிரிக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.