"வெற்றியை அஜித் சாருக்கு டெடிகேட் பண்ணுகிறேன்!"- மார்க் ஆண்டனி விழாவில் எமோஷனலான ஆதிக் ரவிச்சந்திரன்! முழு வீடியோ உள்ளே

மார்க் ஆண்டனி விழாவில் அஜித் குமார் குறித்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்,adhik ravichandran dedicates mark antony success to ajith kumar | Galatta

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. அட்டகாசமான டைம் டிராவல் கான்செப்டில் வித்தியாசமான கேங்ஸ்டர் கதை களத்தில் கலக்கல் காமெடி, ஆக்சன் என்டர்டைனர் படமாக வந்திருக்கும் மார்க் ஆண்டனி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் ரிப்பீட் மோடில் ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி விழா தற்போது நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்காக நன்றி தெரிவித்து பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த வெற்றியை நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு டெடிகேட் செய்வதாக குறிப்பிட்டு பேசினார். அப்படி பேசுகையில்,

“இரண்டாவது படத்தின் சறுக்கலுக்கு பிறகு எப்படியாவது எழுந்து வர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நான் நினைத்துக் கொண்டே இருப்பேன். எல்லா வேலைகளிலும் கஷ்டங்கள் இருக்கிறது நான் அதற்குள் போகவில்லை மன ரீதியாக தயாராகி ஓடுவதற்கு என்ற ஒரு பாசிட்டிவிட்டி இருக்கிறது அல்லவா… அது ரொம்ப ரொம்ப கடினம். அந்த ஒரு உந்துதல் நமக்கு கொடுக்க வேண்டும் அதை கொடுத்தது விஷால் சார்.. “நன்றி அண்ணா!” வெற்றிகரமான இயக்குனர்களை நம்பி பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய பெரிய பட்ஜெட்களில் படங்களை தயாரிப்பார்கள் ஆனால் எந்தவித நல்ல வரலாறும் இல்லாத என்னை மாதிரியான ஒரு இயக்குனருக்கு 50 - 55 கோடிகளுக்கும் மேல் பட்ஜெட் உள்ள ஒரு படத்தை தயாரிக்க முன் வந்திருக்கும் எங்களுடைய தயாரிப்பாளருக்கு முதலில் நீங்கள் கைத்தட்டல்களை கொடுங்கள் இது ஒரு பயங்கரமான நம்பிக்கையை கொடுக்கும் என்னை மாதிரியான சக இயக்குனர்களுக்கு என்று நினைக்கிறேன். ஏனென்றால் வெற்றி தோல்வி வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் என்று நான் நினைக்கிறேன் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு வெற்றி கிடைத்தால் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையில் ஒரு தோல்வி இருக்கும். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்காக நான் பலருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன். அதை தாண்டி தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு வெற்றி இருக்கிறது அல்லவா.. அதற்கு என்னுடைய அப்பா அம்மாவிற்கு நான் அதை டெடிகேட் பண்ணுகிறேன் இருப்பினும் அதைத் தாண்டி அஜித் சாரை நான் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அவரை சந்தித்தபோது எனக்கு இருந்த மனநிலைக்கும் அந்த படப்பிடிப்பை முடித்து நான் வந்த பிறகு எனக்கு இருந்த மனநிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. படத்தின் ஜானரை மாற்ற மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தார். உ”ன்னால் முடியும் நீ பெரிய படங்களை பண்ணு” என மிகப் பெரிய நம்பிக்கை கொடுத்தது அஜித்குமார் சார் தான். எனவே இந்த தருணத்தில் எனக்கான வெற்றியை நான் அஜித் சாருக்கு டெடிகேட் பண்ணுகிறேன்” என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய அந்த முழு வீடியோ இதோ...