அண்ணாத்த திரைப்படத்தின் அசத்தலான அப்டேட் !
By | Galatta | March 16, 2021 19:15 PM IST
சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.
ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது.
இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அறிவித்தார் சூப்பர்ஸ்டார்.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படத்தில் நடிகர் ஜகபதி பாபு படத்தில் இணைந்துள்ளார். சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார் ஜகபதி பாபு. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
.@IamJagguBhai joins the cast of #Annaatthe.@rajinikanth @directorsiva @immancomposer #Nayanthara @KeerthyOfficial pic.twitter.com/k9ZHVLUNNx
— Sun Pictures (@sunpictures) March 16, 2021
WOW: Viswasam actor onboard for Rajinikanth's Annaatthe!
16/03/2021 06:45 PM
WOW: This popular actress gives birth to a baby boy - wishes pour in!!
16/03/2021 06:00 PM
Silambarasan TR's Manmadhan Re Release Trailer is now out - watch video here!
16/03/2021 05:00 PM
GV Prakash's Bachelor New Promo Teaser - Big Breaking announcement made!
16/03/2021 03:24 PM