காற்றின் மொழி படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ராட்சசி. இந்த படத்தை கௌதம்ராஜ் இயக்கியிருந்தார். இதனையடுத்து ஜோதிகா கைவசம் ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் மற்றும் நடிகர் கார்த்தி படம் என 3 படங்கள் உள்ளது. 

jyothika

இதில் ஜாக்பாட் படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜோதிகா போலீஸாக வலம் வரவுள்ளாராம். மேலும், முக்கிய வேடங்களில் ரேவதி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இதற்கு ஆர்.எஸ்.ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

jyothika

இதனை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார். தற்போது, படத்தின் ட்ரெய்லரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

anandaraj anandaraj

தற்போது படத்திலிருந்து Sneak Peek காட்சி வெளியானது. லேடி போலீஸாக ஆனந்த்ராஜ் அசத்தலான காமெடி செய்கிறார்.