இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Hiphop Tamizha Quarantine and Chill Official Lyric

இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருந்தார்.இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படங்கள் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சமூகஅக்கறையுடன் பாடல்களும் வெளியிடுவார்.

Hiphop Tamizha Quarantine and Chill Official Lyric

கடைசியாக இவர் வெளியிட்ட தமிழி பாடல் சூப்பர்ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து கொரோனா காலத்தில் Quarantine And Chill என்ற காதல் பாடலை தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.