கடும் குளிரில் உருவான லியோ திரைப்படம்.. படக்குழுவினரை கவுரவிக்கும் விதத்தில் வெளியான சிறப்பு வீடியோ இதோ..

காஷ்மீரில் லியோ படக்குழுவினர்.. அட்டகாசமான வீடியோவை வெளியிட்ட படக்குழு   - Here is the special video from Leo Kashmir schedule | Galatta

தமிழ் திரையுலகமே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் ‘லியோ’. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்திய அளவு அறிமுகப்படுத்தினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்லாமல் அவரது முந்தைய படமான ‘ கைதி’ திரைப்படத்துடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தை கொடுத்து LCU என்ற பிரிவை உருவாக்கி வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த செயல்பாடு இந்திய அளவு மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்து லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக தற்போது கொண்டாடப் பட்டு வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்திற்கு தமிழ் திரையுலகமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  மிரட்டலான அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இப்படத்தின் டைட்டில் வீடியோ முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவு எதிர்பார்பை உருவாக்கியது. லியோ திரைபடத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன். இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும்  பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின்  சில காட்சிகள் முன்னதாக சென்னையில் தொடங்கப்பட்டு, பின் தனி விமானம் ஏற்பாடு செய்து படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு பறந்தனர். மிகப்பெரிய படப்பிடிப்பு குழுவுடன் காஷ்மீரில் முகாமிட்ட படக்குழுவினர் விறுவிறுப்பாக படத்தை எடுத்து தற்போது காஷ்மீர் படப்பிடிப்பு தளத்திற்கான காட்சிகளை நிறைவு செய்துள்ளனர். தற்போது படக்குழு சென்னைக்கு வந்துள்ளனர். சில நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் லியோ திரைப்படம் படமாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் சென்னை வந்ததையடுத்து காஷ்மீரில் கடும் குளிரிலும் கடும் மழையிலும் இரவு பகல் பார்க்காமல் உழைத்த தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் காஷ்மீரில் இத்தனை நாட்கள் எப்படி நகர்ந்தது என்பது குறித்து தொழிலாளர்கள் பேசும் காட்சி தொகுப்பாக வீடியோ அமைந்துள்ளது. மேலும் வீடியோவின் கடைசி நிமிடத்தில் தளபதி விஜய் வரும் சில காட்சிகளும் இணைந்துள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படபிடிப்பு தள சிறப்பு வீடியோவினை ரசிகர்கள் தற்போது அதிகளவு பகிர்ந்து தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். மேலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவினை பகிர்ந்து அதனுடன்,

“மக்களை உற்சாகப் படுத்தும் நோக்கில் பல தடைகளிலும் கடுமையாக உழைத்த லியோ படக்குழுவினருக்கு தலை வணங்குகிறேன். உங்களுக்காக இந்த வீடியோ சமர்ப்பணம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.    

ரசிகர்களின் ஆவலை நாளுக்கு நாள் அதிகாரிக்கும் ‘லியோ’ திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வரும் ஆயுத பூஜை பண்டிகை வெளியீடாக திரைக்கு வெளியாகும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு  – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான glimpse இதோ..
சினிமா

சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான glimpse இதோ..

வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி..  - ‘விடுதலை’ படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி.. சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி.. - ‘விடுதலை’ படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி.. சிறப்பு நேர்காணல் இதோ..

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரேமம் இயக்குனர் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரேமம் இயக்குனர் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அப்டேட் இதோ..