“என்கிட்ட Advantages எடுத்துக்கிட்டாங்க" உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர் – வைரலாகும் கெத்தான பதில்.. முழு வீடியோ இதோ..

தமிழ் திரையுலகில் சந்தித்த நிகழ்வுகள் குறித்து பிரியா பவானி சங்கர் - Priya Bhavani shankar about adjustment term in industry | Galatta

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர். பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ரசிகர்களின் மனதை பரவாலாக கவர்ந்தார் பிரியா பவானி ஷங்கர். பின் தொடர்ந்து கார்த்தி, அருண் விஜய், தனுஷ், ஜெயம் ரவி  போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர்க் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘பத்து தல’, ‘டிமாண்டி காலணி 2’, ‘ருத்ரன்’, ‘பொம்மை’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்து வெளிவரவிருக்கின்றது. இதில் வரும் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் சிலம்பரசனின் பத்து தல படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

பத்து தல படம் குறித்து நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் அப்படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் அவர்களுடன் பிரியா பவானி சங்கர் கலந்து கொண்டார். இதில் திரைத்துறையில் adjustment போன்ற சிக்கல்களை சந்தித்த நிகழ்வுகள் இருக்கா? என்ற கேள்விக்கு,  

"இருந்திருக்கு, ரொம்ப நாளா எனக்கு தெரியாது. ஒரு சில விஷயங்கள் நம்ம செய்யனும் னு.. அது நம்ம‌ யாருனு விவரிக்கறதுக்காக இல்ல.. சினிமா எல்லாமே இரண்டு மடங்கா இருக்கும். எனக்கு சினிமா வட்டம் இல்லாமல் புதுசா வர என்ன சினிமா துறையில்  எப்படி நடத்துவாரு னு எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சு நான் பார்த்தப்போ..

 

நான் அந்த விஷயத்தை சீரியஸா எடுத்துக்க கொஞ்சம் நேரம் ஆனது. நீங்க என்ன சரியா நடத்தனும் ன்றத எல்லாருக்கிட்டையும் நம்ம எதிர்பார்க்க முடியாது. அவங்களே அதை புரிஞ்சு நடத்துகனும்னு எதிர்பார்க்க கூடாது. நான் சின்னதிரையில் இருந்து வந்து வெள்ளிதிரையில் இருக்கிறேன் என்பதெல்லாம் இல்லை.. நீங்கள் எல்லா மக்களையும் சரியான முறையில் அணுக வேண்டும். அவங்களோட வாழ்க்கையையோ அவங்க எங்கிருந்து வந்தாங்க ன்றத பார்க்காதீங்க.. கிருஷ்ணா சார் எல்லோரையும் அப்படிதான் நடத்துவார். சிம்புக்கு என்ன மரியாதை கொடுக்கிறாரோ அதே மரியாதை ஓரு ஜீனியர் ஆர்டிஸ்ட்டுக்கும் தருவார்.  சிம்புக்கு நடிக்க தெரியும் அவர் சிறந்த ஆளுமை அதில். ஆனால் ஒரு ஜீனியர் ஆர்டிஸ்க்கு அது சரியா வராது. அவர்களிடம் கத்துவது தவறு. அதை அணுசரித்து போவது சரியானது அதைதான் கிருஷ்ணா செய்வார். அதுதான் மனித தன்மை. அது எல்லார்கிட்டையும் எதிர்பார்க்குறேன். நானும் அதை எல்லாருகிட்டையும் கொடுக்கிறேன். அது எல்லாருக்கிட்டையும் வந்துடாது னு தாமதமாக தான் தெரிய வந்தது.” என்றார் பிரியா பவானி சங்கர்.

 

மேலும் பத்து தல படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த கௌதம் கார்த்திக் அவர்களிடம் நவரச நடிகர் கார்த்திக் அவர்களான உங்கள் அப்பாவுடன் ஒப்பிடுவது குறித்து, அவர்,  "வளரும் போது அப்பா மாதிரி வரனும் னு சொல்லி சொல்லி எனக்கு சினிமா துறையில் வரனும்ன்ற ஆசை போயிடுச்சு.. அதுக்கப்பறம் மணி சார் கூப்டாரு.. அவர் கூப்டு என்னால முடியாது னு சொல்ல முடியாது.. அதுக்கப்பறம் திரும்பவும் அப்பா மாதிரி வரனும் னு சொன்னாங்க.. பின்னர் தான் நான் யோசிச்சேன் எனக்கு எதுக்கு அது கவலை.. நான் ஏன் அதை தவறா எடுத்துக்கனும். நான் என் வேலைக்கு நேர்மையா இருக்கேன். நான் என்னோட இடத்தை பிடிக்க போறேன். சில நேரம் அவர் போல் நடிப்பு வந்தாலும் அதை ஒண்ணும் செய்ய முடியாது. நான் என் வேலையை பார்த்துட்டு போறேன். பேசுறவங்க பேசுவாங்க.." என்றார்.

மேலும் பத்து தல திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி..  - ‘விடுதலை’ படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி.. சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி.. - ‘விடுதலை’ படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி.. சிறப்பு நேர்காணல் இதோ..

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரேமம் இயக்குனர் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரேமம் இயக்குனர் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அப்டேட் இதோ..

வெற்றி மாறன் நடிகர் சூரிக்கு சொன்ன மூன்று கதைகள்..  வைரலாகும் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

வெற்றி மாறன் நடிகர் சூரிக்கு சொன்ன மூன்று கதைகள்.. வைரலாகும் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..