ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. நடாஷா சிங் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன், குதிரை ஒன்றும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

jiiva jiiva

இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.  

gypsy gypsy

படத்தின் ரிலீஸ் டீஸர் சமீபத்தில் வெளியானது. தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. வீதி கலைஞர்களை சிறையில் பிடித்து வைத்துள்ளனர். அங்கிருக்கும் காவல் அதிகாரிகளை தட்டி கேட்கிறார் நடிகர் ஜீவா. இந்த காட்சிகள் சென்சாரில் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.