தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் குமார் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் உல்லாசம். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை  ஒளிப்பதிவாளர் ஜீவா ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். அஜித் குமார் மற்றும் விக்ரம் உடன்  நடிகை மகேஷ்வரி S.P.பாலசுப்ரமணியம் ரகுவரன் என பலர் நடித்திருந்த இத்திரைப்படத்தை “ஜேடி மற்றும் ஜெர்ரி” சகோதரர்கள் இயக்கினார்கள். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. 

அதைத்தொடர்ந்து விசில் என்ற திரில்லர் திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி சகோதரர்கள்  இயக்கினர். சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த விசில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்கள் மட்டுமல்லாது 500-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை ஜேடி-ஜெர்ரி சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்ததாக லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் சரவணன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தை  ஜேடி-ஜெர்ரி சகோதரர்கள் இயக்கி வந்தனர். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இத்திரைப்படத்தில் பணியாற்றினார். 

directors jd and jerry brothers mother passes away due to covid 19

தற்போது ஜேடி ஜெர்ரி சகோதரர்களின் தாயார் சூசை அம்மாள் உயிரிழந்துள்ளார் சில தினங்களாக  கோரோனோ தோற்றாள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த சூசை அம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ஜேடி ஜெர்ரி சகோதரர்களின் தாயார் சூசை அம்மாளின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.