உலகெங்கும் கொரோன வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம்  பொதுமக்களை  படாதபாடு படுத்துகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாக உயர்ந்து வருவதை ஒட்டி பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் உள்ளது.மேலும் தமிழகத்தை சேர்ந்த பல திரை பிரபலங்களும் குறைவால் பாதிக்கப்பட்டு வருவதை தினசரி நாம் பார்க்கிறோம் அதில் ஒரு சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையிலிருந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு எதையும் நம்மால் காண முடிகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான திரு.வசந்தபாலன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக தனது பணியை தொடங்கினார். வெயில் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வசந்தபாலன் அவர்கள் முதல் திரைப்படத்திலேயே சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கினார் வசந்தபாலன்.

சில தினங்களுக்கு முன்பு நோய் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட வசந்த பாலனுக்கு நோய் தொற்று உறுதியானது. வைரஸ் தொற்று தீவிரம் அடைந்த காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் வசந்தபாலன். இரு தினங்களுக்கு முன்பு உடல்நிலை தேறிய வசந்தபாலன் தனக்கு உதவியாக இருந்த இயக்குனர் லிங்குசாமியை புகழ்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் பூரண குணமடைந்த இயக்குனர் வசந்தபாலன் தற்போது மருத்துவமனையில் இருந்து  வீடு திரும்பி உள்ளார். தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியதால்  சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.