கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற சேவைகள் கிடைக்காது என்பதால் மக்களின் அன்றாட செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் ஆறுதலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

gouravnarayanan

இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன். இயக்கம் அல்லாது நடிப்பிலும் அசத்தி வருகிறார் கௌரவ். தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

gauravnarayanan gouravnarayanan

அதில், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் டைரக்டர்ஸ் கட், பிஸி வித் சஞ்சித் என குறிப்பிட்டுள்ளார். மிக அழகாக முடித்திருத்தம் செய்த இயக்குனரை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.