அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினார். தொலைக்காட்சி புகழ் நடிகை வாணி போஜன் இந்த படத்தில் அறிமுகமாகியிருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் வெற்றி நடை போட்டது. 

aswathmarimuthu

இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். 
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுள் வேடத்தில் நடித்து அசத்தினார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது. 

AshwathMarimuthu OhMyKadavule

இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரித்து தனது இன்ஸ்டாகிராமில் விஜய்சேதுபதியிடம் முத்தம் வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது எப்படி, தலைவன் கிட்ட நாம கிஸ் வாங்காம இருப்போமா..? என் இனிய விஜய் சேதுபதி அண்ணா, இந்த உலகத்துல எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம மத்தவங்களுக்கு நல்லது செய்யுற மனசுதான் கடவுள். அப்போ படத்துல மட்டுமில்ல, எனக்கும் நீங்க கடவுள் தான். அதனால் தான் நீங்க மக்கள் செல்வன் என நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.